Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…? நிற்காமல் சென்ற பேருந்து…. சிறைப்பிடித்த பொதுமக்கள்… பின் நடந்த சம்பவம்….!!

மாணவ-மாணவிகளை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்தை பொதுமக்கள் சிறைப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானியிலிருந்து பெருந்துறையை நோக்கி புறப்பட் ட அரசு டவுன் பேருந்து காலை 8 மணியளவில் கூரபாளையம் பிரிவு அருகே சென்றது. அப்போது அந்த பேருந்தில் ஏறி பெருந்துறை செல்வதற்காக அப்பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். ஆனால் அந்த பேருந்து அங்கு நிற்காமல் சென்றுவிட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் அந்த பேருந்து பெருந்துறை சென்றுவிட்டு மீண்டும் பவானிக்கு காலை 9 மணியளவில் திரும்பி வந்து கொண்டிருந்தது. அப்போது கூரபாளையம் பிரிவு அருகில் சென்றபோது அப்பகுதி பொதுமக்கள் சாலையின் குறுக்கே நின்று அந்த பேருந்தை தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். அதன்பின் பொதுமக்கள் பேருந்து டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் எதற்காக பஸ்சை நிறுத்தி மாணவர்களை ஏற்றி செல்லவில்லை என்று கேட்டனர்.

அதற்கு டிரைவர் கூறியதாவது “பேருந்து சக்கரம் ஒன்று பழுதாகிவிட்டது. இதனால்தான் பேருந்தை நிறுத்தாமல் சென்றுவிட்டோம். இல்லையென்றால் பேருந்தை நிறுத்தி இருப்போம்” என்று கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அந்த பேருந்தை விடுவித்துவிட்டனர். இதன் காரணமாக அந்த பேருந்து சுமார் 30 நிமிடத்திற்கு பிறகு அங்கிருந்து புறப்பட்டது.

Categories

Tech |