Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…? திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சி….!!

பனியன் அரவை மில்லில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள காட்டுப்பாளையம் பகுதியில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் இதே பகுதியில் பனியன் அரவை மில் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த மில்லில் பனியன் கழிவு துணிகளை வாங்கி வந்து அவற்றை அரைத்து பஞ்சு தயாரித்து மீண்டும் நூலாக திரித்து அதன் நிறுவனங்களுக்கு அனுப்பும் தொழில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மில்லில் 30-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது பழைய பனியன் துணிகள் வைத்து இருக்கும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்படி நிலைய அலுவலர் காந்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சுமார் 1 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு மில்லில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்து மின் கசிவினால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பழைய மணியன் கழிவு துணிகள் வைத்திருந்த மூட்டைகள் எரிந்து நாசமானது.

Categories

Tech |