குடிபோதையில் வாலிபர் சாலையில் உருண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி கமர்சியல் சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும். இந்நிலையில் குடிபோதையில் வந்த ஒரு வாலிபர் திடீரென அந்த சாலையின் நடுவே படுத்து கொண்டார். அப்போது வாலிபர் தனக்கு மதுபானம் வாங்கித் தர வேண்டும் என கூறிக்கொண்டே சாலையில் உருண்டு கொண்டிருந்தார். இதன் காரணமாக சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபரிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அவரை சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர். ஆனாலும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த வாலிபர் மீண்டும் சாலையில் படுத்து உருண்டார். அதன்பின் ஒரு வழியாக காவல்துறையினர் வாலிபரை சமாதானப்படுத்தி அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.