திருமணமகததால் ஏக்கத்தில் இருந்த டிரைவர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தடபெரும்பக்கம் ராஜா தெருவை சேர்ந்த முருகன் என்பவர் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார் . இவர் திருமணம் செய்துகொள்ளும் ஏக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தாயாரிடம் அடிக்கடி திருமணம் செய்து வைக்குமாறு கூறி தகராறு ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இவர் சம்பவ தினத்தன்று மது அருந்திவிட்டு தாயிடம் வழக்கம்போல தகராறில் ஈடுபட்டுள்ளார். இதன் பின் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் இருந்த புடவை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டார்.
இதையடுத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பின்புறம் உள்ள குழாயில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் வீட்டை விட்டு சென்ற மகனை தேடிய அவரது தாய் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மகன் தூக்கில் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து டிரைவர் முருகனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.