Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எதுவுமே சரியா இல்ல… பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்… அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

கொரொனா தொற்று அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்த மாதம் 10ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தப்படும்  என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு சில மக்கள் உண்ண உணவு இல்லாமல் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இதனையடுத்து அங்கு அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவமனையில் போதிய அளவு இடவசதி இல்லாததால் பல்வேறு இடங்களை தற்போது கொரோனா சிறப்பு முகாமாக மாற்றப்பட்டுள்ளது.இந்நிலையில் அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு முகாமில் 60 பேர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் தனிமைபடுத்தப் பட்டுள்ளனர். அங்கு ஆண் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக இடம்  ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்களுக்கு தேவையான மருந்து,  நீர், உணவு ஆகியவை மாவட்ட நிர்வாகத்தினாரால் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அங்கு தனிமைப்படுத்தப்பட்டு இருந்த ஆண்கள் திடீரென முகாமின் வாயிலில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  தாங்கள் தங்கிருக்கும் அறைகளில் உள்ள குளியல் மற்றும் கழிவறைகள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதாகவும் தங்களுக்கு வழங்கப்படும்  உணவுகள் தரமானதாக இல்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கழிவறையை சுத்தம் செய்வதற்கு தேவையான பொருட்களை வாங்கித் தருவதாகவும், தரமான உணவுகள்  கொடுப்பதற்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறியுள்ளனர். இதனால் சமாதானம் அடைந்தவர்கள் போராட்டத்தை  கைவிட்டு அங்கிருந்து கலைந்து முகாமிற்குள் சென்று விட்டனர்.

Categories

Tech |