Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“கால்வாய் ஆக்கிரமிப்பு” இதுயெல்லாம் கணக்கெடுக்கனும்…. கலெக்டரின் உத்தரவு….!!

 ஏரிகளுக்கு தடையின்றி தண்ணீர் செல்ல கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உதயேந்திரம் பகுதியில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 250 ஏக்கர் பரப்பில் இருக்கின்ற பெரிய ஏரியை கலெக்டர் அமர் குஷ்வாஹா நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது ஏரியின் பரப்பளவு, ஏரி முழுவதுமாகப் பரவி இருக்கின்ற கருவேலமரங்களை அகற்றுதல் குறித்தும், ஏரியினை டிரோன் மூலம் வரைபடம் தயாரிக்கவும் கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து மேட்டுபாளையம் கிராமத்தில் பாலாறு உதயேந்திரம் கால்வாயை பார்வையிட்டு அதனை தூர்வாரவும், ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை கணக்கெடுத்து மாற்று இடம் வழங்கவும் நடவடிக்கை எடுப்பதற்கு கோட்டாட்சியர் மற்றும் தாசில்தாருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்பின் ஜாப்ராபாத்தில் பாலாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து உதயேந்திரம் ஏரிக்கு செல்லும் கால்வாயை பார்வையிட்டு அங்கு கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், கால்வாயை தூர்வாரவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து நிரந்தரமாக தடுப்பணையில் இருந்து தண்ணீர் எவ்வித தடையுமின்றி ஏரிக்கு செல்வதற்கு திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பவும், இந்த பணிகளை வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக முடிக்கவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்பின் பள்ளிப்பட்டு ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் போகும் கால்வாய், புதர்மண்டி இருப்பதை புனரமைக்க பொதுப்பணித்துறை பொறியாளருக்கு கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |