கஞ்சா விற்பனை செய்த பெயிண்ட் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பூபாலராயர் பகுதியில் தடையை மீறி கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது அங்கு ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்து அவரை கையும், களவுமாக பிடித்து விட்டனர்.
அதன் பிறகு அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பெயிண்டர் தொழிலாளியான செல்வம் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் செல்வம் விற்பனைக்காக வைத்திருந்த 200 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக செல்வத்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.