இங்கிலாந்தின் தலைநகரில் காவல்துறையினர் கடந்தாண்டு நடத்திய சோதனையில் காருக்குள் போதைப்பொருட்கள் வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட ஓட்டுநருக்கு நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது .
லண்டனிலிருக்கும் Brent டிலுள்ள சாலையில் காவல் துறையினர் கடந்தாண்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அங்கு வந்த காரை மறித்து சோதனை செய்தனர். இதனையடுத்து காரினுள் போதைப் பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்த காவல்துறையினர், அதனை ஓட்டிக் கொண்டு வந்த Azeem என்பவரை கைது செய்தனர்.
மேலும் கார் ஓட்டுநரின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் அவருடைய வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அவருடைய வீட்டில் வெடி மருந்துகளும், துப்பாக்கியும், போதைப் பொருட்களும் இருந்துள்ளது. மேலும் ஒரு பெட்டிக்குள் 2,20,000 பவுண்டுகளும் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அனைத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, நாங்கள் சோதனையில் துப்பாக்கியையும், வெடிமருந்துகளையும் கண்டுபிடித்ததால் எங்கேயோ நடைபெறவிருந்த வன்முறையை தடுத்துள்ளதாக எண்ணுகிறோம் என்றுள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட Azeem ஹாரோ கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அங்கு அவருடைய குற்றம் நிரூபிக்கப்பட்டதால் Azeem க்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.