Categories
உலக செய்திகள்

“ஐ.. யானை பொம்மை!”.. உள்ள என்ன இருந்தது தெரியுமா..? இப்படி ஒரு நபரா..!!!

பிரான்சில் ஒருவர் நடந்து சென்றபோது கோடிக்கணக்கில் பணம் கிடைத்தநிலையிலும், அவரின் செயல் வியக்க செய்துள்ளது.

பிரான்சில் உள்ள Bordeaux என்ற பகுதியில் வசிக்கும் ஒருவர் கடந்த 24 ஆம் தேதி அன்று இரவு Mérignac என்ற நகரத்திலுள்ள Dr. Fernand-Grosse’s avenue தெருவில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த தெருவில் யானை உருவத்தில் மிகவும் அழகான பொம்மை போல ஒன்று கிடந்துள்ளது. அதனை பார்த்தவுடன் கையில் எடுத்தவர், அதிலிருந்த மூடியை அழுத்தி பார்த்துள்ளார்.

அதில், சுமார் 85,000 யூரோக்கள் இருந்துள்ளது. அதனை கண்டவுடன் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2,01,84,749 ரூபாயாகும். தனக்கு கிடைத்தது அதிஷ்டம் என்று யாராக இருந்தாலும் எடுத்துச் சென்று விடுவார்கள். ஆனால் அவரோ நள்ளிரவு நேரத்திலும் நேரடியாக காவல்நிலையத்தில் சென்று பணத்தை ஒப்படைத்திருக்கிறார்.

அதன் பிறகு காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். அதில் கடத்தல் தொழில் மற்றும் போதைபொருள் தொடர்புடைய கும்பல் கைமாற்றும் பணம் என்று கருதப்படுகிறது. எனினும் முழுமையான விசாரணை மேற்கொண்ட பின்பு இது தொடர்பில் உண்மை தகவல் தெரியவரும். இந்நிலையில் சமூக வலைதளங்களில், இந்த நபருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Categories

Tech |