நேற்று நடைபெற்ற ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியின் (யூரோ) முதல் ஆட்டத்தில் துருக்கியை வீழ்த்தி இத்தாலி அணி வெற்றி பெற்றது.
கொரோனா தொற்று காரணமாக ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்ட யூரோ கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது.இந்த போட்டியில் பங்கேற்கும் 24 நாடுகளை சேர்ந்த அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது . நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ‘ஏ ‘பிரிவில் உள்ள துருக்கி – இத்தாலி அணிகள் மோதிக்கொண்டன. போட்டி தொடங்கியது முதல் இரு அணிகளும் ஆக்ரோஷத்துடன் விளையாடினர்.
ஆனால் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2 வது பாதியில் 53 வது நிமிடத்தில் துருக்கிய அணி வீரர் ஓன் கோல் அடித்தார். இதைத்தொடர்ந்து இத்தாலி அணியும் தனது அதிரடி ஆட்டத்தை காட்டியது. இதில் இத்தாலி அணி வீரர்களான இம்மொபைல் 66வது நிமிடத்தில் ஒரு கோல் , இன்சிக்னே 79வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அசத்தினர் .பதிலுக்கு துருக்கி அணி கோல் அடிக்க முடியாமல் திணறியது. இறுதியாக 3-0 என்ற கணக்கில் இத்தாலி அணி முதல் ஆட்டத்திலேயே அபார வெற்றி பெற்றது.