யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்து அணிகள் வெற்றியை கைப்பற்றியது.
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரியா – வட மாசிடோனியா அணிகள் மோதிக்கொண்டன. முதல் பாதியில் 2 அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தது. அதன்பின் 2 வது பாதியில் ஆஸ்திரியா அணி வீரர்கள் 78, 89வது நிமிடங்களில் தலா ஒரு கோலை அடிக்க, 3-1 என்ற கோல் கணக்கில் மாசிடோனியா அணியை வீழ்த்தி ஆஸ்திரியா அணி வெற்றியை கைப்பற்றியது . இதைத் தொடர்ந்து மற்றொரு போட்டியில் நெதர்லாந்து – உக்ரைன்அணிகள் மோதிக்கொண்டன.
இதில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆனால் 2 வது பாதியில் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது . நெதர்லாந்து அணி 52, 58 வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தனர். அதேபோல உக்ரேன் அணியும் பதிலடி கொடுக்கும் விதமாக 75, 79வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த போட்டி டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 85 வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி மேலும் ஒரு கோலை அடித்ததால், 3-2 என்ற கணக்கில் உக்ரைன் அணியை தோற்கடித்து , நெதர்லாந்து வெற்றியை கைப்பற்றியது.