யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இத்தாலி வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது .
16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் (யூரோ ) கடந்த மாதம் 11-ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி நள்ளிரவில் முனிச் நகரில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் – இத்தாலி அணிகள் மோதிக்கொண்டது.இதில் முதல் பாதி ஆட்டத்தில் இத்தாலி 2 கோல் அடித்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பெல்ஜியம் அணி 47- வது நிமிடத்தில் ஒரு கோலை பதிவு செய்தது. அதன்பிறகு இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் இறுதியாக 2-1 என்ற கணக்கில் இத்தாலி அணி வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்தது.