Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : அரைஇறுதிக்கு முன்னேறிய டென்மார்க் அணி…!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் செக்குடியரசு அணியை வீழ்த்தி டென்மார்க் அணி  அரைஇறுதிக்குள்  நுழைந்தது .

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நேற்று நடைபெற்ற           3-வது கால்இறுதி ஆட்டத்தில்  டென்மார்க் , செக் குடியரசு அணிகள் மோதிக்கொண்டன. இதில் தொடக்கத்திலிருந்தே போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் முதல் பாதி ஆட்டத்தில் 5-வது நிமிடத்தில் டென்மார்க் வீரர்  தாமஸ் டெலானி தலையால் முட்டி கோலாக்கினார் . இதையடுத்து 42-வது நிமிடத்தில் சக வீரரான மாலே தட்டிக் கொடுத்த பந்தை கேஸ்பர் டோல்பெர்க் கோலாக்கினார். இதனால் டென்மார்க் அணி 2  கோல்களை அடித்து முன்னிலை வகித்தது.

இதன்பிறகு பிற்பாதி ஆட்டத்தில் 49- வது நிமிடத்தில் செக்குடியரசு வீரர் பாட்ரிக் சீக் கோல் அடித்தார். இதையடுத்து கோல் போட முயற்சித்த செக்குடியரசு அணியின் போராட்டத்திற்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியாக 2-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதன்மூலம் கடந்த 1992-ஆம் ஆண்டுக்கு பிறகு செக்குடியரசு அணியை வீழ்த்தி முதல் முறையாக டென்மார்க் அணி அரை இறுதிக்குள்  நுழைந்தது.

Categories

Tech |