Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : ஜெர்மனியை வீழ்த்திய இங்கிலாந்து ….கால் இறுதிக்கு முன்னேற்றம் ….!!!

கடந்த 1966 ஆம் ஆண்டிற்கு பிறகு  இங்கிலாந்து அணி நாக் அவுட் சுற்று ஆட்டத்தில்  ஜெர்மனியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது .

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று லண்டனில் நடைபெற்ற 2 வது சுற்றில் முன்னாள் சாம்பியனான ஜெர்மனி இங்கிலாந்துடன் மோதியது. இதில் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் 2 வது பாதி ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் இங்கிலாந்து அணி அதிரடி ஆட்டத்தை காட்டியது. இதில் 75 வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ரஹீம் ஸ்டெர்லிங் முதல் கோலை பதிவு செய்தார். அடுத்ததாக 86 வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி கேன் தலையால் முட்டி கோல் அடித்தார் . இதற்கு பதில் கோல் அடிக்க  ஜெர்மனி அணி எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகியது .  இறுதியாக இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது.

இதையடுத்து இன்று அதிகாலையில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில்  ஸ்வீடன் – உக்ரைன் அணிகள் மோதிக்கொண்டன. இதில் முதல் பாதி ஆட்டத்தில் 27வது நிமிடத்தில் உக்ரைன் அணி முதல் கோலை  பதிவு செய்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்வீடன் அணி 43 வது நிமிடத்தில் ஒரு கோலை அடிக்க இரு அணிகளும் 1-1 என சமனில் இருந்தது. இதில் ஆட்டத்தின்       2 வது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. ஆனால் அப்போதும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் 5 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. இதில் ஆட்டத்தின் 121 வது நிமிடத்தில் உக்ரைன் அணி கோல் அடித்தது. இறுதியாக உக்ரேன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் அணியை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தது.

Categories

Tech |