Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : லோகடெல்லி அதிரடி …! நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைந்த இத்தாலி…!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இத்தாலி அணி வெற்றி பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது .

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் குரூப் ‘பி ‘பிரிவில் உள்ள ரஷ்யா –  பின்லாந்து அணிகள் மோதிக்கொண்டன. இதில் விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் ரஷ்ய வீரர் அலெக்ஸி மிரன்சுக் 45வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். அதன் பிறகு இரு அணியாலும்  கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இறுதியாக 1-0 என்ற கோல் கணக்கில் ரஷ்ய அணி பின்லாந்தை  வீழ்த்தி வெற்றி பெற்றது. இதையடுத்து மற்றொரு போட்டியில் குரூப் ‘ஏ ‘பிரிவில் உள்ள துருக்கி – வேல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் வேல்ஸ் அணி வீரர்களான ஆரோன் ராம்சே , கன்னார் ராபர்ட்ஸ் இருவரும் தலா ஒரு கோல் அடித்தனர். ஆனால்  துருக்கி அணியால் பதிலுக்கு ஒரு கோல் கூட  அடிக்க முடியவில்லை.

இதனால் 2-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் பிறகு மூன்றாவது போட்டியில் குரூப் ‘ஏ ‘பிரிவில் உள்ள சுவிட்சர்லாந்து – இத்தாலி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இத்தாலி வீரர் மானுவேல் லோகடெல்லி 26 ,25 ஆவது நிமிடங்களில் 2 கோல்களை அடித்து அதிரடி காட்டினார். இறுதிக்கட்டத்தில் இத்தாலி வீரர் சிரோ இம்மோபைல் ஒரு கோல் அடித்தார். ஆனால் ஸ்விட்சர்லாந்து அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இறுதியாக 3-0 கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தி இத்தாலி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் யூரோ கால்பந்து தொடரில் நாக்-அவுட் சுற்றுக்குள்  நுழைந்த முதல் அணியாக  இத்தாலி உள்ளது.

Categories

Tech |