Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : சுலோவாகியாவை வீழ்த்தி சுவீடன் அணி வெற்றி…!!1

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் சுலோவாகியாவை வீழ்த்தி சுவீடன் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது .

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த இ பிரிவு லீக் ஆட்டத்தில் சுவீடன்-சுலோவாகியா அணிகள் மோதின.ஆனால் முதல் பாதியில் 2 அணிகளும் கோல் அடிக்காததால் 0-0 என சமனில் இருந்தது. இதன்பிறகு ஆட்டத்தின் 2 வது பாதியில் 77வது நிமிடத்தில் கிடைத்த அருமையான பெனால்டி வாய்ப்பை சுவீடன் அணி வீரர் எமில்ஸ் போர்ஸ் பெர்க் கோல் ஆக்கினார். இறுதியாக 1-0 என்ற கோல் கணக்கில்  சுவீடன் அணி , சுலோவாகியாவை  வீழ்த்தி வெற்றி பெற்றது. இதையடுத்து  மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா – செக்குடியரசு அணிகள்  மோதிக்கொண்டன.

விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 2 அணிகளும் தலா ஒரு கோல் அடித்து 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமனில் முடிந்தது. ஆனால் போட்டி சமனில் முடிந்தாலும் செக்குடியரசு அணி  நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி உள்ளது . இதன் பிறகு  இன்று அதிகாலையில்  நடந்த மற்றொரு போட்டியில் இங்கிலாந்து – ஸ்காட்லாந்து அணிகள் மோதிக்கொண்டன. ஆனால் இரு அணி வீரர்களும் ஆட்டத்தில் ஒரு கோல் கூட அடிக்காததால் 0-0 என்ன சமனில் முடிந்தது. ஆனால் இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது .

Categories

Tech |