Categories
உலக செய்திகள்

பெண் உரிமைக்காக நடந்த சந்திப்பு… 2 பேருக்கு 2 நாற்காலி… அவமதிக்கப்பட்ட ஐரோப்பிய ஆணையத்தின் பெண் தலைவர்…!!

பெண் உரிமைகள் குறித்து பேசுவதற்காக துருக்கி சென்ற போது ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் அவமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி தலைநகர் அங்காராவில் நேற்று முன்தினம் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான Ursula von der leyen, ஐரோப்பிய கவுன்சிலின் தலைவரான Charles michel, துருக்கி அதிபரான Recep tayyip erdogan ஆகியோர் பெண்கள் உரிமை முதலான பல விஷயங்கள் குறித்து பேசுவதற்காக சந்தித்துள்ளனர். ஐரோப்பிய ஆணையத்தின் ஒற்றை பெண்ணாக நின்று திறம்பட செயல்படுத்துகிறார் உர்சுலா.

அந்த சமயத்தில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான உர்சுலா, ஐரோப்பிய கவுன்சிலின் தலைவரான சார்லஸ் மற்றும் துருக்கி அதிபரான ஏர்கான் ஆகியோர் பேச்சுவார்த்த நடக்கும் இடத்திற்கு சென்றபோது இரண்டு ஆண்களும் அமர்ந்து கொள்வதற்காக தனித்தனியே இரண்டு நாற்காலிகள் அருகருகே போடப்பட்டிருந்தது உர்சுலாவுக்கு நாற்காலி போடாததால் ஏன் போடவில்லை என கைகளை கொண்டு சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்ததால் உர்சுலா அருகில் உள்ள சோபாவில் அமர்ந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து யாரும் வெளிப்படையாக பேசவில்லை என்றாலும் இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் பிறகு உர்சுலா செய்தி தொடர்பாளர்களிடம் இது குறித்து பேசியபோது “எனக்கு மற்றவர்களுக்கு இணையாக நாற்காலி போடாததன் மூலம் துருக்கி நெறிமுறைகளை மீறி விட்டதாகவும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

Categories

Tech |