ஐரோப்பிய கண்டம் 500 வருடங்களில் இல்லாத வகையில் கடும் வறட்சியை சந்தித்திருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பால் பல இன்னல்களை சந்தித்தன. இது மட்டுமல்லாமல், இயற்கை பேரிடர்களாலும், பருவநிலை மாற்றங்களாலும் தொடர்ந்து பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஐரோப்பிய கண்டத்தில் சுமார் 500 வருடங்களில் இல்லாத வகையில் கடும் வறட்சி நிலை காணப்படுகிறது.
இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய கழகமானது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஐரோப்பிய கண்டத்தில் மூன்றில் இரு பங்கு பகுதிகள் எச்சரிக்கை பகுதிகளாக இருக்கிறது. மின் உற்பத்தி பாதிப்படைந்ததோடு, உள்நாட்டில் கப்பல் போக்குவரத்தும் தடைப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.