ஜெர்மனி, காற்றின் தரம் மோசமானதை கவனிக்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
ஜெர்மனியில் உள்ள பெர்லின், ஹாம்பர்க் மற்றும் முனிச் போன்ற 26 முக்கிய நகரங்களில் காற்றின் தரம் மோசமாக உள்ளது. ஜெர்மன் அதனை கட்டுப்படுத்தவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது கடந்த 2018 ஆம் வருடத்தில் ஐரோப்பிய ஆணையம், ஜெர்மன் கடந்த 2010ஆம் வருடத்திலிருந்து, ஆண்டிற்கான நைட்ரஜன் டை ஆக்ஸைடு வெளியிடுவதற்குரிய அளவை தொடர்ச்சியாக மிஞ்சியிருக்கிறது என்ற புகாரை பதிவு செய்திருந்தது.
இதற்கான தீர்ப்பு தான் தற்போது வெளியாகியிருக்கிறது. மேலும் ஐரோப்பிய ஆணையம், ஜெர்மன் அதிகாரிகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இந்த தீர்ப்பிற்கு உடன்பட்டு சரியான நடவடிக்கையை மேற்கொள்ளாவிடில், ஜெர்மன் அதற்குரிய அபராதத்தை செலுத்த நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.