Categories
தேசிய செய்திகள்

யாஸ் புயலால் ஊரை காலி செய்த 11.5 லட்சம் பேர்… முகாம்களில் தஞ்சம்..!!

மேற்கு வங்காளத்தில் இரண்டு பேர் புயல் காரணமாக உயிரிழந்த நிலையில் 11.5 லட்சம் பேர் வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி ஒடிசா மற்றும் சாகத் தீவுக்கு இடையே இன்று மதியம் கரையைக் கடக்க உள்ளது. இந்த புயல் காரணமாக மணிக்கு 165 கிலோ மீட்டர் முதல் 185 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீசுகின்றது. மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் யாஷ் புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் 2 பேர் பலியான நிலையில் 11.5 லட்சம் பேரை அருகிலுள்ள முகாமில் தங்க வைத்துள்ளனர். பலத்த காற்று வீசியதால் 40 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. 5 பேர் காயமடைந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் புயல் காரணமாக நேற்று மாலை மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்து கீழே விழுந்துள்ளது. அங்கு முழு வீச்சில் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 24 ஆயிரம் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் 8000 வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |