பூங்காவில் உள்ள மரத்தடியில் அணில்கள் கொத்துக்கொத்தாக இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் Richmond பகுதியில் உள்ள பூங்காவில் இருக்கும் மரத்தடியில் கொத்துக்கொத்தாக அணில்கள் இறந்து கிடந்ததை கண்ட ஒருவர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இந்த பூங்காவில் இறந்த அணில்கள் அனைத்தும் நோய்வாய்ப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது .இந்த இறந்த அணில்களின் உடலில் நச்சுப் பொருள் இருந்ததை தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் ஆய்வு மேற்கொண்டதில் பைன் மரங்களை தாக்கும் ஒருவகை வண்டுகளால் நச்சுப்பொருள் உருவாகியுள்ளது.
இந்த நச்சு பொருளை அணில்கள் உட்கொண்டதால் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.அதேசமயம் அணில்களுக்கு வேண்டுமென்றே விஷம் வைக்கப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர் . ஆனாலும் பொதுமக்களின் இந்த அக்கறை உணர்வை பாராட்டியுள்ள போலீசார் யாரேனும் சந்தேகம் படும் வகையில் நடந்துகொள்வதாக தெரியவந்தால் தங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.