Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இறைச்சி கடை வரை இருந்த கால் தடம்… அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்… விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்…!!

குடியாத்தம் அருகில் பசுமாடுகளை திருடி இறைச்சிக்காக வெட்டிய சகோதரர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்குன்றம் குள்ளப்ப கவுண்டர் பட்டியில் அரி என்ற விவசாயி வசித்து வருகின்றார். இவர் சினையாக இருக்கும் இரண்டு பசு மாடுகளை வளர்த்துள்ளார். இந்நிலையில் அரி தன் வீட்டின் அருகில் கட்டியிருந்த இரண்டு பசு மாடுகளையும் காணவில்லை. இதனையடுத்து அரி 2 பசுமாடுகளை தேடி அலைந்தபோது மாட்டின் கால் தடம் பதிந்து இருந்த வழியை நோக்கி சென்றுள்ளார். அப்போது மாட்டின் கால் தடம் இறைச்சிக்காக மாடுகளை அறுக்கும் காயிதே மில்லத் நகர் வரை இருந்துள்ளது. அந்த இடத்தில் அரியின் மாட்டை கட்டியிருந்த கயிறு, மாடுகளின் கால்கள், தலை போன்றவற்றை இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து அரி மற்றும் கிராம மக்கள் அனைவரும் சித்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், தாலுகா இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன்,  சிவசந்திரன் போன்றோர் சித்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டு வந்த பொதுமக்களிடம் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்துள்ளனர். அதன்பின் பொதுமக்கள் அவர்களது சாலை மறியலை கைவிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாடுகளை திருடி சென்ற குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்திருகின்றனர்.

அப்போது சித்தூர் கேட் பகுதியில் முபாரக் அலி என்பவர் பசு மாடுகளை திருடி இறைச்சிக்காக வெட்டியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் முபாரக் அலியின் அண்ணனான அதே பகுதியில் இறைச்சிக் கடை வைத்திருக்கும் ரபிக் என்பவரும் இந்த செயலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் முபாரக் அலியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்பின் தலைமறைவாக இருக்கும் ரபீக் என்பவரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |