Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இவங்கள பார்த்த சந்தேகமா இருக்கு ….விசாரணையில் வெளிவந்த உண்மை …. போலீஸ் அதிரடி நடவடிக்கை ….!!!

சாராயம் கடத்திய 2 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை  நடத்தி வருகின்றனர்.

நாகை மாவட்டம் நாகூரை அடுத்துள்ள மேலவாஞ்சூர் பகுதியில் உள்ள சுங்க சாவடியில் நேற்று முன்தினம் இரவு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர் .இந்த விசாரணையில் அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை காவல்துறையினர் சோதனை செய்தனர் . அதில் சாராயம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதைதொடர்ந்து அவர்கள் விசாரணை நடத்தியதில்  நாகூர் சாமந்தான்பேட்டை பகுதியை சேர்ந்த  கந்தவேல் மற்றும் திருச்சி கிழபடையார்ச்சி தெருவை சேர்ந்த சூசைராஜ் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரும் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2  பேரையும் கைது செய்தனர் .மேலும் அவர்களிடம் இருந்த 5 லிட்டர் சாராயம் மற்றும் 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |