சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கன்னி அம்மன் கோவிலின் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கன்னியம்மன் கோவில் எதிரில் சந்தேகத்தின்படி நின்ற 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் அவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையை சேர்ந்த அஜித்குமார், ரெட்டிபாளையத்தை சேர்ந்த செல்வகுமார் ஆகியோர் என்பதும், இவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அஜித்குமார், செல்வகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து 1,200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.