Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இவங்கள பார்த்தால் சந்தேகமா இருக்கு…. மாட்டி கொண்ட 5 பேர்…. வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக முயல்களை வேட்டையாடிய 5 பேரை வனத்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை வனச்சரக அலுவலர் தாஹிர் அலி தலைமையில் வனக்காப்பாளர்கள் சகிலா, சிவநேசன், கணேசன் ஆகியோர் தொண்டியகாடு முதல் அதிராம்பட்டினம் வரை இரவு வேளையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மரவக்காடு அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 5 பேரை வனக்காப்பாளர்கள் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், ஜெயசங்கர், விக்னேஷ், அன்பு, நாகராஜ் ஆகியோர் என்பதும் இவர்கள் முயல்களை வேட்டையாடியது வனக்காப்பாளர்களுக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்ததோடு அவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் 5 பேரிடம் இருந்து வேட்டையாடப்பட்ட முயல்கள் மற்றும் அவற்றைப் பிடிக்க பயன்படுத்திய வலை போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.

Categories

Tech |