Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இவங்கள தொடர்ந்து நாங்களும்’…. “ஐபில் போட்டில விளையாட மாட்டோம்” …! “ஷாக் கொடுத்த நியூசிலாந்து” ….!!!

மீதமுள்ள ஐபிஎல் தொடரில் நியூசிலாந்து வீரர்களும், பங்குபெற மாட்டார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது .

14 வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால் போட்டியில் பங்குபெற்ற வீரர்கள் அவர்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சில தினங்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் இந்த ஆண்டு இங்கிலாந்து அணி சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளதால் , மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் விளையாட மாட்டார்கள் என்று  தெரிவித்துள்ளது .

தற்போது இவர்களைத் தொடர்ந்து நியூசிலாந்து  வீரர்களும் ,மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் விளையாட மாட்டார்கள் என்று தெரிகிறது. ஏனெனில் வருகின்ற செப்டம்பர் மாதம் நியூசிலாந்து அணி ஐக்கிய அரபு அமீரகத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் நியூசிலாந்து வீரர்கள், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உள்ளதால் அவர்களும் ஐபிஎல் போட்டியில் பங்கு பெறுவதற்கான, வாய்ப்புகள் இல்லை என்று தெரிகிறது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் என்று பிசிசிஐ ஆலோசித்து வந்த நிலையில் ,தற்போது பாகிஸ்தான்- நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையேயான தொடர்,  நடைபெறுவதால் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இங்கிலாந்து வீரர்களைப் போலவே, ஐபில் தொடரில் நியூசிலாந்து வீரர்களும் முக்கிய வீரர்களாக இடம்பெற்றுள்ளன. குறிப்பாக தற்போது இந்த சீசனில் ஹைதராபாத் அணியின் கேப்டனாக டேவிட் வார்னருக்கு பதில் ,நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் செயல்பட்டு வருகிறார். இதனால் இங்கிலாந்தை தொடர்ந்து , நியூசிலாந்து வீரர்களும்  ஐபிஎல் போட்டியில் பங்குபெற முடியாதது, பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது .

Categories

Tech |