பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டாம் என்று சிங்கப்பூர் மருத்துவர் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிங்கப்பூர் நாட்டில் 2 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் அரசின் திட்டத்தை நிறுத்திவைக்குமாறு மருத்துவகள் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து முகநூலில் மருத்துவர்கள் அமைப்பு தெரிவிக்கையில், அமெரிக்க நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட 13 வயது மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் நோய் தடுப்பு மையம் ஆய்வு செய்து வருகிறது. இதனால் இந்த ஆய்வு அறிக்கை வெளியாகும் வரை சிங்கப்பூரில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.