ஐபில் தொடரில் வீரர்களுக்கு ,கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால்,போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது .
14வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால்,போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. ஆனால் 29 லீக் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. நடந்து முடிந்த போட்டிகளின் தரவரிசை பட்டியலில், டெல்லி அணி முதலிடத்திலும் ,சிஎஸ்கே அணி 2வது இடத்திலும் மற்றும் பெங்களூர் அணி 3-வது இடத்தையும் பெற்றுள்ளது. இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் இல்லாத அளவிற்கு, நடப்பு சீசனில் பெங்களூர் அணி அதிரடி ஆட்டத்தை காட்டியது. தொடக்கத்திலிருந்தே அனைத்துப் போட்டிகளிலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. இதனால் பெங்களூர் அணியின் ரசிகர்கள் இந்த சீசனில் பெங்களூர் அணி, கோப்பையை நிச்சயம் வெல்லும் என்று கருதினர். ஆனால் ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், அவர்களுக்குப் பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் அளித்த பேட்டியில், இந்த சீசனில் பெங்களூர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. ஆனால் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் அந்த அணியினருக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. அதோடு தரவரிசை பட்டியலிலும் பெங்களூர் அணி மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. அணியின் கேப்டன் விராட் கோலி இந்த சீசனில் சிறப்பாக அணியை வழி நடத்தியுள்ளார். குறிப்பாக அதிரடி ஆட்டக்காரர்களான மேக்ஸ்வெல் மற்றும் டி வில்லியர்ஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி உள்ளனர். இதைத்தொடர்ந்து பந்துவீச்சிலும் முகமது சிராஜ் , ஹர்ஷல் பட்டேல்ஆகியோரும் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளனர். எனவே ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது நிச்சயமாக பெங்களூர் அணிக்கு பெரும் வேதனையையும் , ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.