Categories
உலக செய்திகள்

இவங்கதான் அதிகமா தடுப்பூசி போட்டுருக்காங்க …. தடுப்பூசி போட்டுக்கொண்டதில் …. பிரபல நாடு சாதனை ….!!!

உலகளவில் அதிகமாக தடுப்பூசி போட்டுக் கொண்ட நாடுகளில்  ஐக்கிய அரபு அமீரகம் சாதனை படைத்துள்ளது .

உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்று பரவலை  கட்டுப்படுத்த  தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி அதிகக் தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில்  ஐக்கிய அரபு அமீரகம் சாதனை  படைத்துள்ளது . இதுவரை அங்கு 15.5 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் ,மொத்த மக்கள் தொகையில் 72.1 சதவீத மக்கள் முழுமையாக கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு அடுத்தபடியாக சீஷெல்ஸ் நாட்டில் 71.7 சதவீத மக்கள்  தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

இதையடுத்து அங்குள்ள 7 மாகாணங்களில் சுமார் 58.3 மில்லியன் கொரோனா  பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அந்நாட்டில் அவசர பயன்பாட்டிற்காக மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பாக ஐக்கிய அமீரகத்தில்  ஆஸ்ட்ராசெனகா, பைசர் உட்பட 4 கொரோனா  தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் அந்நாட்டில் உள்ள மக்கள் தங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை தேர்வு செய்வதோடு மட்டுமின்றி, அதை அந்நாட்டு அரசே  இலவசமாக வழங்குகிறது .

Categories

Tech |