தனியார் பள்ளியில் இரும்புக் கதவு மற்றும் கம்பியை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான நர்சரி பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் அங்க பள்ளிக்குள் புகுந்து அங்கிருந்த இரும்புக் கதவுகள் மற்றும் இரும்பு கம்பிகளை திருடி சென்றுள்ளனர். இதனை அறிந்த பள்ளியின் உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் நடத்திய விசாரணையில் டி.என்.புதுக்குடி பகுதியில் வசிக்கும் அமல்ராஜ், கருப்புசாமி மற்றும் விபின்குமார் ஆகியோர் இணைந்து அந்தப் பள்ளியில் இருந்த இரும்பு பொருட்களை திருடியது தெரிய வந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இரும்பு கம்பியை திருடிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.