காவல் நிலையத்தில் போலீஸ்காரர் பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டையில் இருக்கும் காவல் நிலையத்தில் பெண் போலீஸ் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இதே காவல் நிலையத்தில் அம்மன் பேட்டை பகுதியில் வசிக்கும் முருகானந்தம் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகின்றார். இந்த போலீஸ்காரர் முருகானந்தம் அவ்வப்போது பெண் போலீசுக்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் போலீஸ் முருகானந்தம் காவல் நிலையத்தில் இரவு வேளையில் அந்தப் பெண் போலீசாரிடம் பேசிக்கொண்டு இருந்தபோதே அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் போலீஸ் அய்யம்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இந்தப் புகாரின் படி போலீசார் முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து அறிந்த போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் என்பவர் போலீஸ்காரர் முருகானந்தத்தை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.