உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், குல்தீப் யாதவ் இடம்பெறாதது பற்றி முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார் .
வருகின்ற ஜூன் மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ள, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ,நியூசிலாந்துடன் மோத உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை, சில தினங்களுக்கு முன் பிசிசிஐ வெளியிட்டது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்திய அணி விளையாட உள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. ஆனால் இந்தத் தொடரில் குல்தீப் யாதவ் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் மூன்றுவிதமான போட்டிகளிலும் விளையாடி உள்ளார். ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து ஓரங்கட்டப்பட்டு , தற்போது இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் நீக்கப்பட்டதற்கு, பல வீரர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் கூறும்போது, தற்போது உள்ள இந்திய அணி நல்ல பலம் வாய்ந்த அணியாக காணப்படுகிறது. இந்த இறுதி டெஸ்ட் போட்டியிலும்,அதோடு இங்கிலாந்திற்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் பலத்துடன் இருக்கின்றனர். ஆனால் போட்டியில் விளையாடுவதற்காக 20 பேர் கொண்ட இந்திய அணியில் சுழல் பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதோடு ஜடேஜா, அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர், பிளேயிங் லெவனில் நன்கு பேட்டிங் தெரிந்த, சுழல்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கி இருப்பதால், குல்தீப் யாதவ்க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக , தோன்றுகிறது என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.