Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவரை டீம்ல இருந்து தூக்க முடியாது”….! விராட் கோலி அதிரடி பேச்சு …!!!

இந்திய அணியில் 6-ம் நிலை வீரராக களமிறங்கும்  ஹர்திக் பாண்டியாவின் பங்களிப்பு மிக முக்கியமானது என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்த நிலையில் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது .இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கிட்டத்தட்ட 2 வருடங்களுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் இந்திய அணி ப்ளேயிங் லெவெனில் இடம்பெறப்போகும் வீரர்கள் யார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறும்போது,” அணியில் ஹர்திக் பாண்டியாவை  வெளியேற்ற முடியாது .ஏனெனில் அவர் 6-வது வீரராக களமிறங்கி சிறப்பான விளையாடி வருகிறார்.

மேலும் பகுதி நேர பந்து வீச்சாளராகவும் ஹர்திக் பாண்டியாவால் செயல்பட முடியும் என்பதால் இந்திய அணிக்கு பெரும் பலமாக காணப்படுகிறார். தற்போது அவர் பந்து வீசவில்லை என்றாலும் இனி வரும் போட்டிகளில் அவர் நிச்சயம் குறைந்தது 2 ஓவர்களில் பந்து வீசுவார். அதோடு இறுதி ஓவரில் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை முடிக்கும் ஹர்திக் பாண்டியா அணியின் தொடக்கத்தில் சற்று சறுக்கலை சந்தித்தாலும் ,பின்வரிசையில் அவரால் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க முடியும். அதோடு  போட்டியில் எந்த நேரத்திலும் அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இதனால் ஹர்திக் பாண்டியாவை அணியிலிருந்து வெளியேற்றுவது கடினம் “என்று  விராட் கோலி தெரிவித்துள்ளார்.இதன்மூலமாக  ஹர்திக் பாண்டியா பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இடம் பெறுவார் என்பது உறுதியாகியுள்ளது.

Categories

Tech |