Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சொன்னதை கேட்காமல் வாறாங்க…. நடவடிக்கை எடுக்கனும்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

பழைய பேருந்து நிலையத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை மீறி உள்ளே நுழையும் ஆட்டோ உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வேலூர் பேருந்து நிலையத்திலிருந்து கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு ஆற்காடு, பள்ளிகொண்டான் போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் பேருந்து நிலையங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இவ்வாறு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறினால் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பேருந்து நிலையத்தில் அறிவிப்பு பலகையும் 4 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி பேருந்து நிலையத்தில் ஆட்டோக்கள் வந்து பயணிகளை ஏற்றிச் செல்லும் செயலில் ஈடுபட்டு வருகின்றது.

அதிலும் சில ஆட்டோக்கள் பேருந்துகள் வந்து செல்வதற்கு இடையூறாக நிறுத்தி பயணிகளை ஏற்றுகிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறையினர் தடையை மீறி பேருந்து நிலையத்தில் நுழைந்து பயணிகளை ஏற்றிய ஆட்டோ உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். ஆனால் இந்த செயல் தொடர்ந்து நடைபெற்று வருவதால் தடுப்பதற்காக கார், ஆட்டோ, இருசக்கர வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |