Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இவர்களின் வாரிசுகளுக்கு….பணி நியமன ஆணை…. கலெக்டர் வழங்கினார்….!!

வருவாய்த்துறையில் பணியின்போது இறந்த அலுவலர், பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இரக்கத்தின்படி பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கியுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை பணியின்போது உயிரிழந்த அலுவலர் மற்றும் பணியாளர்களின் வாரிசுகள் 7 நபருக்கு இரக்கத்தின்படி பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து ஆலத்தூர் கிராம உதவியாளராக பணிபுரிந்து இறந்த ஜெய்கதிரவன் மனைவி சத்யா என்பவருக்கு குடவாசல் வட்டத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராகவும் மற்றும் நன்னிலம் தனி தாசில்தாராக வேலை பார்த்து இறந்த உமாதேவி மகன் விமல்நாத் ராவ் என்பவருக்கு வலங்கைமான் வட்டத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணி நியமன ஆனைகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார். அதன்பின் கூத்தாநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து இறந்த மல்லிகா மகள் இளமதிக்கு  இந்த மாவட்டத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணிநியமனத்தை கலெக்டர் வழங்கினார்.

இதேபோன்று பனங்காட்டான்குடியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து இறந்த அண்ணாமலை மகள் சமூக பிரியாவுக்கு நன்னிலம் மருதவாஞ்சேரியில் கிராம நிர்வாக அலுவலராக மற்றும் தலையூர் கிராம உதவியாளராக பணிபுரிந்து இறந்த முருககேசன் மகன் அய்யப்பனுக்கு நன்னிலம் சொரக்குடி கிராம நிர்வாக அலுவலராக பணி நியமனம் வழங்கப்பட்டது. மேலும் வலங்கைமான் தாசில்தார் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து இறந்த ராமலிங்கம் மகன் விஜயகுமாருக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகவும்,  வடக்கண்டம் கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து இறந்த ராஜகோபாலன் மகன் சத்யராஜ் என்பவருக்கும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டி, வழங்கல் அலுவலர் கீதா போன்றோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |