Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இவர்களுக்கு இட ஒதுக்கீடு…. 5 % வழங்கனும்…. சங்க கூட்டத்தில் தீர்மானம்….!!

சங்க நிர்வாக கூட்டத்தில் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் தமிழ்நாடு காட்டுநாயக்கன் பழங்குடியினர் ஜனநாயக சீர்திருத்த சங்க நிர்வாகிகள் கூட்டம் ஒன்றை நடத்தியது. அந்தக் கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில், கிளை தலைவர் ஞானசேகரன், செயலாளர் பிரபு போன்றோர் முன்னிலை வகித்தனர். இதற்கு முன்பாக மாநில அலுவல செயலாளர் சரவணன் வரவேற்று பேசினார். இதனையடுத்து மாநில இணை செயலாளர் ராஜூ, மாநில துணைத்தலைவர் கொளஞ்சியப்பன், மாநில பொருளாளர் வெங்கடேசன், மாநில அமைப்பு செயலாளர் பாண்டியன் போன்றோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த கூட்டத்தில் கட்டுநாயக்கன் பழங்குடியின மக்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் பழங்குடியினருக்கான தனி ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்றும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கட்டுநாயக்கன்  பழங்குடியின மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தில் கூறப்பட்டது. அதன்பின் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதியை பழங்குடியினர் தினமாக அனுசரிக்க வேண்டும் என்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Categories

Tech |