ஆப்கானுக்கு உதவுதல் தொடர்பாக சீனா, அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகளுக்கு இடையில் ஒருமித்தமான கருத்து எட்டப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகள் செய்வது மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்து எடுக்கப்பட வேண்டிய முயற்சிகள் தொடர்பாக சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இடையே ஒருமித்தமான கருத்து எட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபத்தில் நடந்த பிரதிநிதிகள் கூட்டத்தில் தலிபான் தரப்பிலிருந்து ஆப்கானின் தற்காலிக வெளியுறவுத்துறை அமைச்சர் Amir Khan Muttaqi கலந்து கொண்டார். இதில் ஆப்கானில் தலைதூக்கி வரும் தீவிரவாதத்தை அகற்றி அண்டை நாடுகளுடன் நட்பை வளர்த்து நல்லுறவை பேணி காக்க வேண்டும் என தலிபான் பிரதிநிதியிடம் மற்ற நாடுகள் வலியுறுத்தியது.