Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவர்தான் என்னோட வருங்கால மருமகன்” …! சாஹிப் அப்ரிடிவெளியிட்ட தகவல் …!!!

பாகிஸ்தான் அணியின் முன்னாள்  வீரரான சாஹித்  அப்ரிடியின் மகளை, பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் ஷா திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியது .

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும், அதிரடி பேட்ஸ்மேனாக  இருந்த சாஹித்  அப்ரிடி, கடந்த 2018 ம் ஆண்டு நடந்த சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில்  விளையாடிய அவர், அதன் பின் ஓய்வு பெற்றார்.இவருடைய மகள்  ,பாகிஸ்தான் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் ஷா அப்ரிடியை   திருமணம் செய்ய உள்ளார் என்ற செய்தி பரவலாகப் பேசப்பட்டு வந்தது. இதுகுறித்து சாஹிப் அப்ரிடியின் ட்விட்டர் பதிவில் , எனது மகளுக்கும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடிக்கும் , திருமணம் நடைபெற உள்ளது ,என்று அவர் உறுதிப்படுத்தினார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ” ஷாஹின் ஷா எனது வருங்கால மருமகனாக  இருக்கிறார். தற்போது எனது மகள், படிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார் என்றும் ,அவர் டாக்டர் படிக்க விரும்புகிறார், என்று கூறினார். மீதமுள்ள படிப்பை பாகிஸ்தான் அல்லது இங்கிலாந்து தொடர்வது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.  ஷாஹீன் ஷா குடும்பத்தினர், என்னுடைய குடும்பத்தினருடன் திருமணம்  குறித்துப் பேசினர் . இரு குடும்பத்தாரின்  சம்மந்தமும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது . இருவரும் திருமணம் செய்ய வேண்டும்  என்று  அல்லா விரும்பினால், அது நன்றாக நடக்கும். ஷாஹீன் ஷா  விளையாட்டிலும், வெளியிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நான் பிராத்தனை செய்கிறேன்”  என்று அவர் கூறினார் .

 

Categories

Tech |