Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவரு ஒரு மேட்ச் கூட விளையாடுல”….’ஆனா கொரோனா நிதி உதவிக்கு வாரி வழங்கிருக்காரு’-புகழ்ந்து தள்ளிய சோனு சூட் …!!!

பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் , கொரோனா தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் .

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2ம் அலை  வேகமாக பரவி வரும் நிலையில்,மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டிற்கு  பல்வேறு வெளிநாடுகளும், பிரபலங்களும் இந்தியாவிற்கு உதவி செய்து வருகின்றன. குறிப்பாக கொரோனா  காலத்தில் பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் ,தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்து கொண்டு வருகின்றார். அவரின் குழுவினருடன் இணைந்து ,கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருத்துவ உபகரணங்களும் ,உணவின்றி தவித்து வரும்  ஏழைமக்களுக்கு உணவு வழங்கியும் உதவி செய்து வருகிறார் . இந்தியா முழுவதும் தன்னுடைய  அமைப்பின் மூலம் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை  செய்து வருகிறார் . இவரின் இந்த செயலுக்கு பொதுமக்களிடம் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அத்துடன் இவருடைய அறக்கட்டளைக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள்  நிதி உதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் சிஎஸ்கே அணியை  சேர்ந்த கரண் ஷர்மா, சோனு சூட் அறக்கட்டளைக்கு கொரோனா நிவாரண நிதி உதவி வழங்கி உள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த சோனு சூட், சிஎஸ்கே அணியை சேர்ந்த  சுழல் பந்து வீச்சாளரான கரண் சர்மாவிற்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் கரண் ஷர்மா என்னுடைய பவுண்டேஷனுக்கு நிதி  அளித்து , இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார், என்று அவரைப் பாராட்டிப் பேசியுள்ளார். ஆனால் கரண் ஷர்மா எவ்வளவு தொகையை  அளித்துள்ளார் என்பது குறித்து அவர் குறிப்பிடவில்லை.

 

Categories

Tech |