Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொஞ்சம் கூட எதிர்பாக்கல… வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளி… துடிதுடித்து உயிரிழப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி தச்சு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் வள்ளல் பாரி தெற்கு தெருவில் ராமதாஸ்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி முத்துவைரம். இந்நிலையில் ராமதாஸ் தச்சு தொழில் செய்து வந்துள்ளார். இதனையடுத்து சிகில்ராஜவீதியில் உள்ள ஒரு கடையில் ராமதாஸ் மாற வேலை செய்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது அறுவை இயந்திரத்திற்கு மின் இணைப்பு கொடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக ராமதாஸ் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |