ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக அரசு மேல்முறையீடு போகணும்னு சொன்னது குறித்து பேசிய சீமான், என்ன நடக்குதுன்னு உங்களுக்கு தெரியும். ஒரு சாதாரண வழக்கு… எங்க தம்பி துரைமுருகன் சும்மா பேசினதுக்கு தான் சிறை. ஆறு மாசமா அவருக்கு பிணை கிடைக்க விடாம தடுத்தார்கள். அதே மாதிரி நான் சிறையில் இருக்கும் பொழுதுமே அந்த வழக்கை எடுக்க விடாமல் ஆறு மாசம் சிறைக்குள் வைத்ததெல்லாம், இருக்கு. அப்போ அரசு தரப்பு வழக்கறிஞர்கள் எந்தவிதமான தர்க்கத்தை வைத்தார்கள் என்று நமக்கு தெரியல. இது அமைதியும், ஒற்றுமையா, ஒரு நல்லிணக்கத்தோடு இருக்கிற ஒரு நாடு.
ஒரு பக்கம் எஸ்டிபி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை விரட்டி கைது செய்தது. அவர்கள் பிற மதங்களுக்கு இணையாக வேலை செய்தார்கள் என்று சந்தேகத்தின் அடிப்படையில், நீங்கள் கைது செய்றீங்க ? கைது செஞ்சு நீங்க எங்க வச்சிருக்கீங்க ? பாருங்க. என்.ஐ.ஏ என்ற கொடுஞ்சட்டத்தை இரண்டு கட்சிகளும் ஆதரிச்சிட்டு. காங்கிரஸ் – பாரதிய ஜனதா கட்சி, திமுக எல்லாரும் சேர்ந்து தான் கொண்டு வந்தது. இவ்ளோ ஒரு கொடுஞ்சட்டத்தை நீங்க இதுல கைது பண்ணி..
ஏற்கனவே ஐயா லூர்து சாமியை அவர்கள் எல்லாம் கொன்னே போட்டீங்க. அவருக்கு பச்ச தண்ணி எடுத்து குடிக்க முடியாது.. கை நடுங்கும், அதற்கு ஒரு உறிஞ்சி குழல் கேட்கிறார். அதுக்கு ரெண்டு மாசம் வழக்கு நடத்தி கொடுக்கலாமா ? கொடுக்க வேண்டாமா? முடிவெடுக்கறதுக்குள்ள.. இறந்துட்டாரு. எத்தனை பேரு உள்ளே கிடக்கிறாங்க இந்த என்.ஐ.ஏ சட்டத்தால்.. இந்த கொடுஞ்சட்டத்தின் மூலம் தான் நாட்டினுடைய ஒற்றுமையை காப்பாற்ற முடியும்னு காட்டி, நாட்டின் ஒற்றுமையை சீர்குலைப்பதே இவங்கதான்.
ஐயா எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சி, பாஜக கட்சியுடன் கூட்டணி வச்சு ஆளும் போது கூட சாகா வகுப்புகள் இதெல்லாம் நடக்கல. இன்னைக்கு இது நடக்குதுன்னா ? என்ன நிபந்தனையோடு நடத்துவது என்று சொல்லுங்கள். இதுவரைக்கும் இல்லை… இப்ப புதுசா நடக்குது… அவங்க தான் மதவாதத்திற்கு எதிரான முற்போக்கு கூட்டணி… அதனுடைய ஆட்சியிலே இப்படி நடக்குது பார்த்து, நாம ரசிச்சு சிரிச்சுக்க வேண்டியது தான், வேற என்ன பண்ண முடியும் ? என தெரிவித்தார்.