தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் சசிகலா உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த நிலையில் தற்போது சசிகலா உள்ளிட்ட எட்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
ஜெயலலிதாவின் மரண விவகாரத்தில் சசிகலா, கே எஸ் சிவக்குமார், ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், ஒய் வி சி ரெட்டி, பிரதாப் ரெட்டி டாக்டர் பாபு ஆபிரகாம் மற்றும் ராமமோகன் ராவ் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.அதன்படி இந்த எட்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறை செயலாளருக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து அனைத்து தேதியிலுமே அப்பல்லோ நிர்வாகம் மருத்துவ அறிக்கை வெளியிட்டது. அதில் டிசம்பர் 4ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 5 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஆறுமுகசாமி ஆணையா அறிக்கை படி நான்காம் தேதி மாலை 3.30 மணிக்கே ஜெயலலிதா இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.