கொரோனா காலத்திலும் தமிழ்நாடு பல சாதனைகளை படைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா கோரத்தாண்டவத்திற்கு மத்தியிலும் தமிழகம் பல சாதனைகள் படைத்து வருகிறது. கொரோனா காலத்திலும் அதிகமாக முதலீடுகளை ஈட்டிய நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கின்றது. இந்த வருடம் மட்டும் சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை முதல் ஆறு மாதங்களில் இந்திய அளவில் மிக அதிக முதலீடுகளை ஈர்த்த முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 31, 464 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன.
அக்டோபர் 12 முதல் 10 ஆயிரத்து 55 கோடி மதிப்பீட்டில் 14 புதிய தொழில்நுட்பங்களை துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
டிசம்பர் மாதத்திலும் 24,500 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
26, 650 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கில் 19, 995 கோடி ரூபாய் மதிப்பில் 18 புதிய தொழில்நுட்பங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
27, 324 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் நோக்கத்தோடு 4, 456 கோடி ரூபாய் மதிப்பில் 5 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டியுள்ளார்.
இதேபோல 47 கோடி ரூபாய் மதிப்பில் 308 நபர்களுக்கு வேலை கிடைக்கும் எண்ணத்தில் காமர் ஐடிசோன் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
இவ்வாறு கொரோனா காலத்திலும், இவ்வளவு முதலீடுகளை ஈட்டியுள்ளது இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் வரும் 2021 ஆம் வருடம் உற்பத்தி அதிகமாகும் என்று நம்பப்படுகிறது.