Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS கூட கூட்டணி இல்ல.. அம்மாவின் விசுவாசிகள் கூடதான்.. TTV Dhinakaran விளக்கம்..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி தலைமையில் எல்லாம் நாங்க இணையவே மாட்டோம் அப்படின்னு தான் நான் பல முறை சொல்லி இருக்கேன். இப்பவும் சொல்லுறேன் அம்மாவுடைய உண்மையான தொண்டர்களாக தங்கள் நினைக்கிறவங்க,  அவங்க எங்கே இருந்தாலும் எல்லாம் ஒரு அணியில் சேர்த்தால்தான் நம்மோடு கூட்டணிக்கு வருகிற கட்சிகளோடு சேர்ந்து,

தேசிய கட்சியுடன் சேர்ந்து தான் தேர்தலை சந்தித்தால் தான் திமுக என்கிற அந்த தீய சக்திகளை வீழ்த்த முடியும். நீங்க என்ன  கேக்கறீங்க என்றால் இபிஎஸ் உங்களுடன் வர மாட்டேங்குறாரே… நான் இபிஎஸ்யை சொல்லலலையே..  அம்மாவுடைய  உண்மையான தொண்டர்கள் எங்கிருந்தாலும் என்று தான்  சொல்கின்றேன். ஈபிஎஸ் அம்மாவின் உண்மையான தொண்டன் இல்லை என்று அவர் நிரூபிக்கிறார், அதைப்பற்றி நான் கூற எதுவும் நினைக்கவில்லை.

பெரிய கூட்டணி வைத்துக் கொண்டு, பத்து கட்சியை வைத்துக் கொண்டு  ராவணன் மாதிரி திமுக இருக்கிறாங்க. இன்னைக்கு ஆளுங்கட்சியாக இருக்கிறார்கள். அவங்களை தமிழ்நாட்டில் வீழ்த்த வேண்டும் என்றால்  நல்ல கூட்டணியை அமைத்திருக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால், ஊடக வெளிச்சத்தில் இருப்பதால், அவர்களை நிறையபேர் தூக்கிப் பிடிப்பதால் அவர்களின் ஆட்சி பெரிய சாதனை செய்த மாதிரி முதலமைச்ச அவரே சொல்லிக் கொள்கிறார். ஆனால் மக்கள் வருத்தத்திலும், ஏமாற்றத்தில் இருக்கிறார்கள் என விமர்சனம் செய்தார்.

Categories

Tech |