செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆவினில் ஹெல்த் மிக்ஸ் தொடர்பாக பாஜக எழுப்பிய முறைகேட்டில், மூன்று மாதமாக இல்லாத ஒரு காரணத்தை சொல்லி, அந்த ஊழல் செய்த நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்திற்கு கொடுப்பதற்கு எவ்வளவு முயற்சி எடுத்து பார்த்தார்கள் ? இதைப் பற்றி இன்று இவ்வளவு பேசுகிறார்கள். ஜெயரஞ்சன் அவர்கள்… இந்த மாநிலத்தினுடைய ஸ்டேட் பிளானிங் கமிஷனில் இருக்கக்கூடிய ஜெயரஞ்சன் அவர்கள் பல விஷயத்தை பற்றி பேசுகிறார்.
ஆனால் அவருடைய தலைமையில் அந்த கமிட்டியில் தான் ஆவின் ஹெல்த் மிக்ஸ்சைஅனுமதி செய்தார்கள் என்று இதுவரை வாயை திறக்கவில்லை, இதுதான் மிகவும் ஆச்சரியமான விஷயம். இலவசங்களை பற்றி பேசுகிறார், பல்வேறு விஷயத்தில் பேசக்கூடிய ஜெயரஞ்சன் அவர்கள், அவருடைய தலைமையில் நடந்த அந்த கமிட்டியில் தான் இந்த ப்ரோகெல்த் மிக்ஸ்சுக்கு பதிலாக,
ஆவின் ஹெல்த் மிக்ஸ் தயாரித்து கொடுக்க வேண்டும் என்று போட்டு நடந்த மினிட்ஸ் ஆப் மீட்டிங் பற்றி இதுவரை பேசாதது மிகப்பெரிய ஒரு ஆச்சரியம். ஆனால் இன்றைக்கு அமைச்சரே மறைமுகமாக ஆவின் ஹெல்த் மிக்ஸ் மார்க்கெட்டுக்கு வரும் என்று சொல்லி இருப்பது பாரதிய ஜனதா கட்சி மனதாக வரவேற்கின்றோம் என தெரிவித்தார்.