செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கோவை செல்வராஜ், அண்ணா திமுக கட்சி விஷயங்களில் ஒருநாளும் பாரதிய ஜனதா கட்சி தலையிட்டது இல்ல, இப்பவும் தலையிட மாட்டார்கள், அந்த மாதிரி எண்ணத்தில் அவர்களும் இல்லை, நாங்களும் அண்ணா திமுகவிலிருந்து இன்னொரு கட்சிசொல்லி கேட்கின்ற அளவிற்கு இந்த கட்சியில் யாரும் இழிவான செயல்பாடு கொண்டவர்கள் அல்ல.
எல்லோருக்கும் திறமை இருக்கிறது, தைரியம் இருக்கிறது. அண்ணன் ஓ பன்னீர்செல்வம் உயிரோடு இருக்கின்ற வரை, இந்த கட்சியை எடப்பாடி போல் 100 பேர் வந்தாலும் கட்சியை ஒன்றும் செய்ய முடியாது, இந்த கட்சி வழிநடத்துகின்ற சக்தி ஓபிஎஸ் இருக்கு இருக்கிறது, தனித்திறமையோடு செயல்படக்கூடிய மனப்பக்குவம் படைத்தவர்.
எந்த சூழ்நிலையிலும் அண்ணா திமுகவினுடைய கொடி, கட்சி, சின்னம் எல்லாமே அண்ணன் ஓபிஎஸ் தலைமையில் ஒருங்கிணைப்பாளர் தலைமையில் தான் செயல்படும். அந்த ஒருங்கிணைப்பாளர் தலைமையில் தொண்டர்களும் செயல்பட வந்துவிடுவார்கள், எந்த தொண்டர்களும் தமிழ்நாட்டில் இருக்கின்ற யாருமே கட்சி அழிய வேண்டும் என்று விரும்புவதில்லை. இரட்டை இல்லை சின்னத்தை இழக்க யாரும் தயாரில்லை.
இரட்டை இல்லை சின்னத்தை இழக்க வேண்டும் என யாராவது தனிப்பட்ட முறையாக, துரோகத்தனமாக செயல்பட்டால் அவர்களை தொண்டர்களே விரட்டி அடிப்பவர்கள். யாரும் ஒன்று பண்ண வேண்டியது இல்லை, இந்த கட்சியை தொண்டர்களை காப்பாற்றுவார்கள். 2016 இல் நடந்ததை விட அல்ல. அவ்வளவு பெரிய பூகம்ப சண்டை நடந்த போது கூட அமைதியாக இருந்து ஒட்டுமொத்து தொண்டர்களும் அண்ணா திமுகவில் பயணிக்கிறார்கள். இந்த உடம்பில் ஓடுகின்ற அண்ணா திமுக, இரத்தம், ஓடக்கூடிய தொண்டர்களை எந்த கொம்பனாலும், எந்த கட்சியாலும் விலை கொடுத்து வாங்குகின்ற சக்தி யாருக்கும் இல்லை என தெரிவித்தார்.