Categories
அரசியல் மாநில செய்திகள்

புயல் வந்தாலும், சுனாமி வந்தாலும், அப்படிதான் – ஸ்டாலினுக்கு முதல்வர் பதிலடி ..!!

மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் தாமதம் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன என்று முதல்வர் வேதனை தெரிவிக்கின்றார்.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தமிழக அரசு திறம்பட மேற்கொண்டு வருகிறது. தமிழக முதல்வரும் இதுகுறித்து பலகட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறார்.

இந்நிலையில் மாவட்டம்தோறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வகையில் மாவட்ட ஆட்சியருடன் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது :

மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் தாமதம் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. மருத்துவ உபகரண கொள்முதலில் தாமதம் என்ற எதிர்கட்சிகளின் விமர்சனம் தவறானது. உயிர்பலியை தவிர்க்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.அரசின் சிறப்பான பணிகளை எதிர்கட்சிகள் திட்டமிட்டு தவறாக விமர்சனம் செய்கின்றன.

மத்திய அரசிடம் தேவையான நிதியை கேட்டுள்ளோம். எதிர்கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசிடம் தமிழகத்திற்கான நிதியை கேட்கவில்லை. நோயை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வது வேதனை அளிக்கிறது. புயல், சுனாமி வந்தாலும் மு.க.ஸ்டாலின் குறை சொல்லிக்கொண்டே தான் இருப்பார் என்று ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழக முதல்வர்.

Categories

Tech |