Categories
சினிமா தமிழ் சினிமா

“அந்தத் தருணத்தில் இறந்திருந்தால் கூட மகிழ்ச்சிதான்”…. விஜய் தூக்கியதை நினைத்து நெகிழ்ந்த மாற்றுத்திறனாளி ரசிகர்…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு நடிகர் விஜய் சமீபத்தில் பனையூரில் ரசிகர்களை சந்தித்து பேசியபோது மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை தன்னுடைய கைகளில் தூக்கி புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலான நிலையில் வாரிசு படத்தின் ப்ரோமோஷனுக்காத்தான் விஜய் அப்படி செய்ததாக பலரும் விமர்சித்தார்கள்.

ஆனால் விஜயின் ரசிகர்கள் பப்ளிசிட்டிக்காக தளபதி அப்படி செய்யவில்லை ரசிகர்களின் சந்தோஷத்திற்காக தான் அப்படி செய்தார் என்று விளக்கம் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் தளபதி விஜய் கைகளில் தூக்கிய மாற்றித்திறனாளி ரசிகரான பிரபாகரன் தான் அணிந்திருந்த வெள்ளை சட்டையை இதுவரை கழட்ட வில்லையாம். அதாவது விஜய்யை ஒருமுறையாவது பார்க்க மாட்டோமா என்று ஏங்கி இருந்த எனக்கு அவர் கைகளில் தூக்கியது பேரின்பமாக இருந்தது. விஜய் என்னை தொட்டு தூக்கிய சட்டையின் நிறம் மாறினால் கூட நான் சட்டையை கழட்ட மாட்டேன்.

அதன் பிறகு விஜய் என்னை கைகளில் தூக்கி அந்த தருணத்தில் நான் இறந்திருந்தால் கூட மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் விஜய் என்னை தூக்கிய தருணத்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் பிரபாகர் சொன்னதை தற்போது வலைதளத்தில் வைரல் ஆக்கி வரும் விஜய் ரசிகர்கள் இப்போது எங்கள் அண்ணா எதற்காக அவரை தூக்கினார் என்று தெரிகிறதா என்று கூறி வருகிறார்கள்.

Categories

Tech |