Categories
அரசியல் மாநில செய்திகள்

மழை வந்தாலும்…. புயல் வந்தாலும்…. நாங்க தான் சிம்மசொப்பனம்…. பாஜகவை எச்சரித்த விசிக…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், கொட்டும் மழையிலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சங்பரிவார் கும்பலுக்கு சிம்மசொப்பனமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் இங்கு அமர்ந்திருக்கும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே..  உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

மழை பெய்யும் என்று தெரியும். புயல் வீசும் என்று தெரியும். புயல்கள் வீசினாலும், மழை கொட்டினாலும் சிறுத்தைகள் எப்பொழுதும் களத்தில் நெருப்பாக நின்று போராடக்கூடியவர்கள் என்பதை மீண்டும் நாட்டிற்கு உணர்த்தக் கூடிய வகையிலே,  இன்றைக்கு நாம் நாடுகள் அளவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

சொல்லப்போனால் நாடாளுமன்ற கூட்டத்தில் கடந்த வாரமே தொடங்கிவிட்டது. இன்றைக்கும் நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனாலும் கூட நான் உங்களோடு இருந்த கொட்டும் மழையில் போராட்டகளத்தில் கை கோர்த்து நிற்கிறேன். சங்பரிவார்களை எச்சரிப்பதற்கான இந்த களத்தில் நாம் இந்த இயற்கையை,  இயற்கையோடு இயற்கையாக இயைந்து நம்முடைய எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டிய ஒரு வரலாற்றுத் தேவை உருவாகியிருக்கிறது.

போராட்டத்தை தள்ளி வைத்திருக்கலாம். இன்னும் 10 நாட்கள் கழித்து மழை நின்ற பிறகு கூட போராட்டத்தை தள்ளி வைத்திருக்கலாம் என்று தோழர்கள் நினைக்கலாம். நமக்கு வெயில் அடித்தால் என்ன ? மழை பெய்தால் என்ன ?  வெயிலும், மழையும் இரண்டும் ஒன்றுதான். அதிகாரத்தில் இருந்தாலும்…

அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் நாம் போராளிகள் தான். அதேபோல வெயிலில் இருந்தாலும்,  மழையில் நின்றாலும் நாம் போராளிகள்தான். எனவே இதை நாம் ஒரு பொருட்டாக கருதாமல்,  உடனடியாக எதிர் வினையற்ற வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த அறிவிப்பை நான்  சில நாட்களுக்கு முன்பு அறிக்கையாக வெளியிட்டேன் என தெரிவித்தார்.

Categories

Tech |