Categories
உலக செய்திகள்

தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும்…. பலி எண்ணிக்கை குறையாது…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

தடுப்பு மருந்து கொடுத்தாலும் அமெரிக்காவில் பலி எண்ணிக்கையை குறைக்க முடியாது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலகத்தையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா பாதிப்பிலிருந்து பெரும்பாலான உலக நாடுகள் மீண்டும் வருகின்ற நிலையில் அமெரிக்காவில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் உலக நாடுகள் பலவும் அமெரிக்காவை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளன. அமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் நாள்தோறும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகளும் 2500-க்கும் அதிகமான இறப்புகளும் பதிவாகியுள்ளன.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒன்றரை கோடியை கடந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 2 லட்சத்து 90 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் தடுப்பு மருந்தை மக்களுக்கு விரைவில் வழங்க வேண்டும் என்று அமெரிக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் தடுப்புமருந்து வழங்கப்பட்டாலும் மரண எண்ணிக்கையை கணிசமாக குறைக்க முடியாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன் பல்கலைக்கழகம்  மேற்கொண்ட ஆய்வில், வரும் ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்காவில் கொரோனா பலி 5 லட்சத்தை தொடும் என்றும், தடுப்பு மருந்து வந்தாலும் 9000 இறப்புகளை மட்டுமே தடுக்க முடியும் என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளது. மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கினால் 66,000 உயிர்களை  காப்பாற்ற முடியும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |